ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர்களிடம் சந்தித்தபோது பேசியுள்ளதாவது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினரிடம் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் முதல்வர் அறிவித்த நடவடிக்கை தொடரும் எனவும் சிபிஐ அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்ற ஒன்றரை வருடங்களில் அரசியல் நடவடிக்கை பற்றியும் தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.
மேலும் முக்கிய நிர்வாகிகள் 50 பேர் மட்டுமே மனு அளிக்க வருகின்றோம் என உறுதி அளித்து இருக்கின்றனர். இது குறித்து சோசியல் மீடியாவில் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள். இதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் ஆதரவாளர்களும் வதந்திகளை பரப்ப வேண்டாம். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில் யாரும் அது குறித்து பேச வேண்டாம். மேலும் சோசியல் மீடியாவில் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.