Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கி சூடு… உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம்… எம்.பி கனிமொழி வழங்கல்..!!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம் நிதி உதவி.

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் உயிரிழந்தார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அரசு மூலமாக தலா 20 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி பரிந்துரையின் பேரில் மேலும் கூடுதலாக தலா 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியானது நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் என சில அமைச்சர்கள் முன்னிலை வகித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் எம்.பி கனிமொழி பங்கேற்று 13 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.

Categories

Tech |