Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்… ரேஸ்கோர்ஸில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்…!!!

ரேஸ்கோர்ஸில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்ட பணி நடைபெற்று வருகின்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் சாலையில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியுள்ளதாவது, மழை நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கோவையில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் ரேஸ்கோர்ஸ் சாலையில் 25 இடங்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் நவீன முறையில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்படுகின்றது. இந்தத் தொட்டியின் மூடி நீல நிறத்தில் அமைக்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் மழை நீர் தொட்டியை அடையாளம் கண்டு கொள்ளலாம். மழைநீர் தொட்டிகள் அமைப்பதன் வாயிலாக நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம் என தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |