மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்திருக்கும் பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தினால் கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவ கிராமங்களில் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள்.
இவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் பொன்னேரி துணை ஆட்சியர், தாசில்தார் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்கள். இதுபோல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோரைகுப்பம் மற்றும் கடம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்கள்.