Categories
சினிமா தமிழ் சினிமா

மோதல்: சண்டையிடும் விஜய்-அஜித் ரசிகாஸ்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டாக்…!!!!

மிக மோசமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.

தமிழ் சினிமா உலகில் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். சென்ற 2014 ஆம் வருடம் விஜய்யின் ஜில்லா திரைப்படமும் அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்களுக்கு வெளியிடப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது. அண்மையில் விஜய், “அவர் என் நண்பர் தானே. அவரின் திரைப்படம் நன்றாக ஓடினால் சந்தோஷம் என தெரிவித்ததாக ஷாம் கூறியிருந்தார்.

துணிவு பட இயக்குனர் வினோத், விஜய்-அஜித் இரண்டு நட்சத்திரங்கள் மிக கடுமையான உழைப்பால் தற்போது இந்த இடத்திற்கு வந்திருக்கின்றார்கள். அவர்கள் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படங்கள் வெற்றியடைய இறைவனை பிராத்திப்பதாக தெரிவித்திருந்தார். இயல்பாகவே விஜய்-அஜித் ரசிகர்கள் இருவரும் மாறி மாறி சண்டை போடுவார்கள்.

இந்த நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிஸில் நேரடி மோதல் ஏற்பட்டிருப்பதால் ரசிகர்களின் சண்டை எல்லை மீறி உள்ளது. அண்மையில் வெளியான ரஞ்சிதமே பாடலை விட அஜித்தின் சில்லாசில்லா பாடல் சில மணி நேரத்திலேயே அதிக பார்வையாளர்களை சந்தித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் துணிவில்லா வாரிசு, வாரிசிடம் குனிவு என்ற ஹேஷ்டாக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது. தற்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |