Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனை பட்டா வழங்குங்க… இல்லைனா, குடியரசு தினத்தன்று கால வரையற்ற உண்ணாவிரதம்… ஆட்சியரிடம் மனு…!!!

வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இச்சிப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, எங்கள் பகுதியைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் எங்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். சென்ற 2021 ஆம் வருடம் பட்டா வழங்குவதற்கான நிலத்தில் பூங்கா அமைப்பதற்கு செடிகளை நட்டார்கள்.

மேலும் தனியார் மூலமாக நீதிமன்றத்திலும் வழக்கும் தொடர்ந்து உள்ளார்கள். மரங்கள் இல்லாத இடத்தில் மரங்களை வெட்ட தடை கேட்டு மனு கொடுத்திருக்கின்றார்கள். ஆகையால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டு எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 12 வருடங்களாக வீட்டு மனை பட்டா கேட்டு வரும் எங்களை காப்பாற்ற வேண்டும் எனவும் ஜனவரி 26 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடியரசு தினத்தன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |