Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிஞ்சிவாக்கம் தடுப்பணையில்… ஆபத்தை உணராமல் குளித்த பொதுமக்கள்… எச்சரித்த போலீசார்..!!!

ஆபத்தை உணராமல் பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கேசாவரம் அணையில் இருந்து கூவம் ஆற்றிற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கின்றது. இதனால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிச்சைவாக்கத்தில் இருக்கும் தடுப்பணை நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது.

தடுப்பணை முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பது பொதுமக்கள் ஏராளமானோர் தண்ணீரை ரசித்தும் ஆபத்தை உணராமல் தண்ணீரில் இறங்கி குளித்தனர் இதனால் உயர்ந்த பணியில் இருந்த போலீச ஆபத்தை உணராமல் குளித்தவர்களிடம் இனிய பணி குடிக்கக்கூடாது எனவும் பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்கள்.

Categories

Tech |