Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொசத்தலை ஆற்று வெள்ளத்தில்… சிக்கிய 18 பேர்… பேரிடர் படையினர் மீட்பு…!!!

ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் பூண்டி ஏறி தண்ணீர் அளவு உயர்ந்தது. இதனால் ஏறியின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 7000 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கொசத்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 42 பேர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்கள்.

இதில் 18 பேர் மட்டும் அப்பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தார்கள். இந்த நிலையில் பேரிடர் மீட்ப படையினர் அங்கு சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள். இதன்பின் அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்கள். இதன்பின் அவர்கள் தங்களின் உறவினர் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.

Categories

Tech |