முன்விரோதம் காரணமாக விவசாயி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இளைஞர் சரணடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பலாக்கனுர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான துரைசாமி என்பவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஏழுமலை என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் துரைசாமி அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கும் ஏழுமலைக்கும் இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டிருக்கின்றது.
இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை நாட்டு துப்பாக்கி எடுத்து துரைசாமியை நோக்கி சுட்டு இருக்கின்றார். இதில் அவரின் வலது பக்க வயிற்றில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதன் பின் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் ஏழுமலை துப்பாக்கியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.