வேலூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காளாம்பட்டியில் இருக்கும் வேலூர் கிரிக்கெட் மைதானத்தில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு அகாடமி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் சென்ற 6-ம் தேதி முதல் நடைபெற்றது. இதில் சேலம், சென்னை, திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு சென்னை அணியும் சேலம் அணியும் தேர்வாகி மோதியது.
இதில் சென்னை அணி 22.2 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதன்பின் களம் இறங்கிய சேலம் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எடுத்து 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் விழாவிற்கு தலைமை தாங்கி வெற்றி பெற்ற சேலம் அணிக்கு வெற்றி கோப்பை பரிசை வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த சென்னை அணிக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.