நடிகர் ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றாரா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றார்கள்.
நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா-3 திரைப்படத்தை தொடர்ந்து அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி-2, துர்கா என தனது கைவசம் நான்கு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இதில் ருத்ரன் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மேலும் அவ்வபோது படபிடிப்பு புகைப்படங்களும் வெளியாகி வருகின்றது. இவர் லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ராகவி என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் அவரின் மகள் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றாரா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.