லவ் டுடே திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு வசூல் சாதனையும் படைத்தது. சென்ற நவம்-4 தேதி வெளியான இத்திரைப்படத்தில் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பல கோடிகள் வசூல் செய்துள்ளது.
மொத்தமாக ரூபாய் 48.90 கோடி லாபம் இப்படம் பெற்றிருக்கின்றது. இதில் விநியோகஸ்தர்களின் கமிஷன் 10 சதவீதம் போக மீதம் 44.8 கோடி தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்திருக்கின்றது. இந்த நிலையில் திரைப்படத்தின் ஹீரோவாக நடித்த பிரதீப் ரங்கநாதன் முதன் முதலில் படத்தில் கமிட் ஆகும்போது 70 லட்சம் சம்பளமாக வாங்கி இருக்கின்றார். இந்த படம் தற்போது மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு மேலும் கூடுதலாக 80 லட்சம் கொடுத்து இருக்கின்றது. இதன் மூலம் இந்த படத்திற்காக அவர் 1.50 கோடி சம்பளமாக வாங்கி இருக்கின்றார்.