நடிகர் ஷாருக்கான் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.
பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஷாருக்கான். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்து மத வழிபாட்டுத் தலமான மாதா வைஷ்ணவி தேவி கோவில் இருக்கின்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று முன்தினம் வழிபாடு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு வந்திருக்கின்றார். தனது முகத்தை யாரும் தெரிந்து கொள்ளாத அளவிற்கு உடைய அணிந்து பாதுகாவலர்கள் மற்றும் போலீசாரின் பாதுகாப்புடன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். வழிபாடு செய்தவுடன் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
mata vaishno devi temple me Shah Rukh Khan. pic.twitter.com/Y7QmKxzVWM
— ᴀᴢʜᴀʀ (@idevoteeSRK) December 12, 2022