ஓடிடியால் சினிமா தொழில் பாதிக்காது என நடிகர் ஷாருக்கான் விளக்கம் அளித்துள்ளார்.
அண்மை காலமாகவே பொழுதுபோக்கு துறையில் ஏராளமான வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஓடிடி தளங்களில் படங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே இருக்கின்றது. இதனால் சினிமா தொழில் பாதிக்கலாம் என திரையுலகினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் இதுபற்றி ஷாருக்கான் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ஓடிடியில் படங்கள் வெளியானாலும மக்கள் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதை நிறுத்த மாட்டார்கள்.
இது போன்ற சவால்களை சினிமா ஏற்கனவே சந்தித்திருக்கின்றது. இது எதிர்காலத்திலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மாற்றங்கள் பல வந்தாலும் மக்கள் திரையரங்கிற்கு சென்று சினிமா பார்ப்பதை நிறுத்த மாட்டார்கள். பிசிஆர் வந்தது, தொலைக்காட்சி வந்தது. ஆனாலும் மக்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை நிறுத்தவில்லை. எப்போதும் சினிமாவிற்கு பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. இருப்பினும் அதுக்கு தகுந்தாற்போல் சினிமா தன்னை மாற்றிக் கொண்டு மக்களை தன் பக்கம் ஈர்க்கின்றது என தெரிவித்துள்ளார்.