Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து இலவசமாக சாம்பல் கிடைக்கணும்… செங்கல் தயாரிப்பாளர்கள் கோரிக்கை… ஆட்சியரிடம் மனு…!!!

தொடர்ந்து இலவசமாக உலர் சாம்பலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் பிளாக்ஸ் நிர்வாகிகள் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நாள்தோறும் 3,500 டன் நிலக்கரி உலர் சாம்பல் கழிவுநீர் வெளியேற்றப்படுகின்றது. இதில் 20 சதவீதம் சாம்பல் கழிவு சாம்பல் செங்கல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகின்றது.

இதற்கான ஒதுக்கீட்டு ஆணை 31.3.2022க்கு புதுப்பிக்கப்படவில்லை. இதனால் சென்ற 9 மாதங்களாக உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உலர் சாம்பல் கொடுக்கவில்லை. இதனால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் இதனை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகையால் உலர் சாம்பல், செங்கல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 20 சதவீத உலர் சாம்பலை தொடர்ந்து இலவசமாக வழங்கும் ஆணையை புதுப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |