மங்கலதேவி கண்ணகி கோவிலை தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டி பட்டியில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கூடலூர் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மக்கள் மனு ஒன்றை நேற்று முன்தினம் தந்தார்கள்.
அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, கூடலூரில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பளியன்குடி அருகே வண்ணாத்தி பாறை மழை மீது மங்களதேவி கண்ணகி கோவில் இருக்கின்றது. இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.
மேலும் கோவில் விழாவை தமிழக அரசு தான் நடத்த வேண்டும். அத்துடன் மாதம் மாதம் நடைபெறும் பௌர்ணமி தினத்தில் கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபாடு நடக்க பளியன் குடி, தென்குடி வழியாக பாதை வசதியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.