அஜித் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து வினோத் பேசியுள்ளார்.
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.
இந்த நிலையில் இயக்குனர் வினோத் பேட்டியில் பல விஷயங்கள் குறித்து பேசி வருகின்றார். அதன்படி அஜித் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்துள்ளதாவது, யாரையும் ஏமாற்றவில்லை. அவர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார் என்பதை தெரிந்துதான் தயாரிப்பாளர்கள் அவரை படத்துக்கு கமிட் செய்கின்றார்கள். தற்போது உலகில் மார்க்கெட்டிங் மிகவும் அவசியமாகும். அது மிகவும் அவசியம். அந்த வகையில் அஜித்தின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஒருவரின் தனிப்பட்ட முடிவில் தலையிட நமக்கு எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ளார்.