விஜய்யுடன் படத்தில் இணைவது குறித்து விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் இன்று திருச்சியில் இருக்கும் எல்.ஏ.சினிமாஸ் தியேட்டரில் விஷால் மற்றும் படக்குழுவினர் வருகை தந்தார்கள். அப்போது ரசிகர்களின் கேள்விக்கு விஷால் பதில் அளித்தார். இதன்பின் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.
அப்போது விஜய் திரைப்படத்தில் நடிப்பது குறித்து அவர் பேசியதாவது, விஜய் படத்தில் நடிக்க எனக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை. ஆனால் பல திரைப்படங்கள் இருப்பதால் அவருடன் என்னால் இணைந்து நடிக்க முடியவில்லை. விஜயை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. நேரமும் காலமும் வரும்போது நல்ல கதையாக விஜயிடம் கூறுவேன் என தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சங்க கட்டிடம் ஏற்கனவே கட்டி முடித்திருப்போம். ஆனால் தேர்தலை நடத்தி மூன்று வருடங்கள் காலம் தாழ்த்தியதால் தான் அந்த பணி நிறுத்தப்பட்டு இருக்கின்றது. விரைவில் அதை கட்டுவோம் என தெரிவித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.