ராஷ்மிகா குறித்து பிரபல நடிகர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார்.
அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி வாகை சூட்டியுள்ளது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ரஷ்மிகாவிடம் காந்தாரா திரைப்படத்தை பார்த்தீர்களா என கேட்டபோது இன்னும் பார்க்கவில்லை என பதிலளித்தார். இதனால் கன்னட ரசிகர்கள் அவரை ஆபாச வார்த்தைகளால் சோசியல் மீடியாவில் கடுமையாக சாடி வந்தார்கள்.
இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தில் ராஷ்மிகாவுடன் இணைந்து நடித்த நடிகர் தனஞ்செயா ராஷ்மிகா குறித்து கூறியுள்ளதாவது, சினிமாவில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கென தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் உரிமை உள்ளது. யாரும் யாரையும் நிர்பந்தப்படுத்த முடியாது. அதேபோல நமது வீட்டில் இருக்கும் ஒருவர் ஏதாவது ஒரு தவறு செய்தால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவோமா என்ன..? அந்த வகையில் ராஷ்மிகா எப்போதுமே நமது கன்னட திரையுலகத்திற்கு சொந்தமானவர்தான். சினிமாவை பொறுத்தவரை ரசிகர்கள் எல்லா விஷயத்தையும் பர்சனாலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார்.