பதான் திரைப்படத்திற்கு இந்துக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடல் வெளியாகிய இரண்டு நாட்களில் 34 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கின்றது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் நிறமும் பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள பேஷ்ரம் ரங் என்ற வார்த்தையும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கான அர்த்தம் வெட்கமற்ற நிறம் என்பது ஆகும்.
இந்த பாடலின் முடிவில் தீபிகா காவிநிற நீச்சல் உடை அணிந்து வருகின்றார். இந்த போட்டோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இந்துக்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள். வேண்டுமென்றே இந்துக்களின் மனதை புண்படுத்துவதற்காக இப்படி செய்து இருக்கின்றார்கள் என பலரும் திட்டி தீர்த்து வருகின்றார்கள். இதனால் “பாய்காட் பதான்”, “பேன் பதான்” என ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்கின்றார்கள்.