வாரிசு திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆக ஒரு மாதமே உள்ள நிலையில் தற்போது தான் தன்னுடைய காட்சிகளை முடித்திருக்கின்றார் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். சூட்டிங் நிறைவடைந்ததும் இயக்குனருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, இயக்குனர் வம்சியின் சினிமா மீதான தாகத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டு பெருமை படுகின்றேன். அவருடன் பணியாற்றியதே மிக அற்புதமான அனுபவமாகும். மேலும் இந்த படத்தில் விஜயை ஸ்டைலிஷாக காட்டி இருக்கும் விதத்தையும் பார்த்து வியந்தேன். விரைவில் பெரிய திரையில் சந்திக்கலாம் என தெரிவித்துள்ளார்.