தேனி மாவட்ட ஆட்சியர் ஓய்வூதியதாரர்களுக்கு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழக அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான நிலுவையில் இருக்கும் ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்றுக் கொள்வது குறித்த குறைகளை பரிசீலனை செய்யும் வகையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகின்றது.
இது அடுத்த மாதம் 6-ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை தாங்க சென்னை ஓய்வூதிய இயக்குனர் முன்னிலை வகிக்கின்றார். ஆகையால் தேனி மாவட்ட ஓய்வூதியதாரர்கள் தங்களின் கோரிக்கை குறித்த மனுக்களை வரும் 23ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.