Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குறைந்த வட்டியில் பணம்… குறுஞ்செய்தியை நம்பாதீங்க… ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

ஆன்லைன் மோசடி குறித்து ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, சோசியல் மீடியாவில் மக்களிடம் நண்பர்களாகி ஈஸியாக ஏமாற்றி வருகின்றார்கள்.

மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்வதை மாணவிகள் மற்றும் பெண்கள் தவிர்க்க வேண்டும். குறைந்த வட்டியில் பணம் தருவதாக செல்போனிற்கு வரும் செய்தியை தவிர்க்க வேண்டும். இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டால் 24 மணி நேரத்தில் சைபர் கிரைம் நம்பர் 1930 அல்லது சைபர் கிரைம் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |