Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிரசவத்திற்காக செய்த அறுவை சிகிச்சை… இளம் பெண் திடீர் உயிரிழப்பு.. அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!!

பிரசவத்திற்காக செய்த அறுவை சிகிச்சையால் இளம் பெண் திடீரென உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டுகுளம் கிராமத்தைச் சேர்ந்த நாகக்கனி என்பவருக்கும் நிரஞ்சன் குமார் என்பவருக்கும் சென்ற வருடம் திருமணம் ஆனது. இந்த நிலையில் நாகக்கனி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சென்ற 5-ம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தார்கள். இதன்பின் தலைமை டாக்டர் விஜயா தலைமையில் அறுவை சிகிச்சை நடந்தது. மேலும் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

இதன்பின் நாகக்கனிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக்கும் அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து நாகக்கனிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ அறிக்கை வேண்டுமென அவரின் தாயார், சகோதரி, கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மருத்துவப் பணிகள் இணை இயக்குனரிடம் அனுமதி கடிதம் பெற்று பின்னர் மருத்துவ அறிக்கை பெற்றுக் கொள்ளுங்கள் என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதனால் மருத்துவமனை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |