Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு… 9 பேர் கைது.. போலீசார் தீவிர விசாரணை..!!!

கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின் வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் சென்ற 8-ம் தேதி பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இதுபோலவே கிருஷ்ணகிரியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் வெங்கடாஜலபதி என்பவரின் தையல் கடை மீது சென்ற 10-ம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றார்கள். இது பற்றி அவரின் கடைக்கு அருகே இருக்கும் பிரமுகர் சந்திரசேகர் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் வாஞ்சி வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசியது கிருஷ்ணமூர்த்தி, சைனா, மோனிஷ், தனுஷ் உள்ளிட்டோர் என்பது தெரிய வந்தது. இதன்பின் போலீசார் நான்கு பேரிடமும் விசாரணை மேற்கொண்டார்கள். முன்விரோதம் காரணமாக கொலை செய்ய அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக காதர், தினேஷ் மேலும் 17, 18, 19 வயதுடைய 3 கல்லூரி மாணவர்கள் என ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள். போலீசார் விசாரணை செய்ததில் காதல் விவகாரத்தை தையல் தொழிலாளி கண்டித்ததன் காரணமாக பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது தெரிய வந்தது. மேலும் கைதான மாணவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் யூடியூபை பார்த்து பெட்ரோல் குண்டு தயார் செய்து கடை மீது வீசியதாக தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 9 பேரிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |