திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஓம சந்ரு ஸ்வாமி 108 நாள் தொடர் அங்கப்பிரதட்சனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி பீட நிறுவனர் ஓம சந்ரு சுவாமி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் வருகை புரிந்தார்.
இவர் காசியில் தமிழ் சங்கம் அமைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் திருப்பணி செய்ய உத்திரவிட்டதற்காகவும் ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்த முதல்வருக்கும் சுப்ரமணிய சுவாமி கோவில் பெருந்திட்ட வளாக பணிகளுக்கு ரூபாய் 200 கோடி நன்கொடையாக தந்த சிவ் நாடாருக்கு நன்றி தெரிவித்து கிரி பிரகாரத்தில் அங்க பிரதட்சணத்தை தொடங்கினார். இதை அடுத்து 108 நாட்கள் தொடர் பிரதட்சணம் செய்ய இருக்கின்றார்.