அனைத்து கிராமங்களிலும் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் அருகே இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என உதவித்தொகைகள் 13 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் என 72 பேருக்கும் 2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதை அடுத்து அவர் பேசும்போது தெரிவித்துள்ளதாவது, பெண்கள் திறந்த வெளியில் மலம் கழித்தால் ரத்தசோர்வு ஏற்படும். இதனால் சுகாதார கேடு விளைவிக்கும். இதனால் தான் மத்திய, மாநில அரசுகள் சுகாதார வளாகம் கட்டும் திட்டத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார்கள். ஆகையால் அனைத்து கிராமங்களிலும் தேவையான இடங்களிலும் வீடுகள் தோறும் சுகாதார வளாகம் கட்ட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பஞ்சாயத்து தலைவர்கள் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.