Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு.. 3 1/2 டன் பீடி இலைகள் கடத்தல்… கடற்படையினர் அதிரடி..!!!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 3 1/2 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுகின்றது. மேலும் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகின்றது. இதனால் தூத்துக்குடி கடலோர காவல்படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மணப்பாடில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக படகு ஒன்று நின்று கொண்டிருந்தது.

அந்த படகை கடற்படையினர் சோதனை செய்ததில் சாக்கு மூட்டைகளில் 3 1/2 டன் பீடி இலை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து படகில் இருந்த காட்வின், பிச்சையா, மில்டன், டார்ச்சன், ரட்சகன் உள்ளிட்ட ஆறு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து பீடி இலை மூட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து ஆறு பேரையும் சுங்க துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

Categories

Tech |