பந்தயத்தின் போது சக்கரம் உடைந்த நிலையிலும் மாட்டு வண்டி ஓட்டியது பரபரப்பை ஏற்படுயுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே இருக்கும் பதினெட்டாங்குடியில் மாட்டு வண்டி பந்தயம் நண்பர்கள் சார்பாக நடந்தது. இதில் ராமநாதபுரம், தேனி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி பந்தயம் மாடுகள் போட்டியில் களமிறங்கியது. இதில் பெரிய மாடு பிரிவில் நடந்த போட்டியில் மாட்டு வண்டிகள் முந்தும் முயற்சியில் ஈடுபட்ட போது ஒரு மாட்டு வண்டியின் சக்கரம் உடைந்த நிலையிலும் சாரதி மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றதால் பார்வையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்பின் அந்த பார்வையாளருக்கும் மாட்டுவண்டிக்கும் பரிசு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மூன்று மாட்டு வண்டி உரிமையாளருக்கும் சாரதிக்கும் பரிசு வழங்கப்பட்டது. இதன் பின் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று மாட்டுவண்டியின் உரிமையாளர்களுக்கும் சாரதிக்கும் பரிசு தொகை மற்றும் நினைவுக்கோப்பை வழங்கப்பட்டது.