Categories
மாவட்ட செய்திகள்

இடைத்தரகர்கள் இல்லாமல் விளைபொருட்கள் விற்பனை செய்வது பற்றி… விவசாயிகளுக்கு விழிப்புணர்வு..!!!

விவசாயிகள் விளைபொருட்கள் இல்லாமல் விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு அருகே இருக்கும் சங்கரன் பந்தலில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் சார்பாக இடைத்தரகர்கள் இல்லாமல் விளைபொருட்களை விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த முகாமில் நாகை விற்பனை குழு அலுவலர் சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு வேளாண் உழவர் நல துறையின் நலத்திட்டங்களையும் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை திட்டம் குறித்தும் விற்பனை கூட வசதிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்து இடைத்தரகர்கள் தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்து அதிகம் லாபம் ஈட்டுவது குறித்தும் விளக்கமாக பேசினார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் விவசாயிகள் பலரும் பங்கேற்றார்கள். இதன் பின் அங்கு வந்தவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Categories

Tech |