Categories
மாவட்ட செய்திகள்

மழை நிவாரணம் வழங்குங்கள்… விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு..!!!

மழை நிவாரணம் வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட உயிர்களை மீண்டும் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து விவசாயம் கூலி தொழிலாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதானம்-சீர்காழி சாலையில் மறியலில் ஈடுபட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதில் உடன்பாடு இல்லாததால் சாலை மறியல் நீடித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியது. இதன்பின் போலீசார் கைது செய்தவர்களை விடுவித்தார்கள். மீண்டும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் துணை ஆட்சியர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் அவர்களின் கோரிக்கையை அரசிடம் தெரிவித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின்னர் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Categories

Tech |