Categories
சினிமா தமிழ் சினிமா

மாளவிகா மோகனின் புதிய படம்.. 20 வயது இளம் நடிகருக்கு ஜோடியாக… வெளியான பட தகவல்..!!!

மாளவிகா மோகனின் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்று வருகின்றது.

நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் பட்டம் போலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமாகவில்லை. இதன் பிறகு தமிழில் நடித்த பேட்ட திரைப்படம் அவரை பிரபலமடையை செய்தது. இதன் பின்னர் விஜய், தனுஷ் உள்ளிட்டோரின் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன்பின் மலையாள திரைப்படங்களில் நடிக்காத இவர் தற்போது கிறிஸ்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

இந்த படத்தில் மேத்யூ தாமஸ் என்பவர் ஹீரோவாக நடிக்கின்றார். இவர் மாளவிகா மோகனுடன் ஒன்பது வயது சிறியவராவார். இந்த படத்தில் இந்த வயதிற்கு உட்பட்ட கதாபாத்திரங்கள் தேவைப்பட்டதாலும் பிரபல கதை ஆசிரியர்கள் என்பதாலும் படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்புக்கொண்டுள்ளார். இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்கப்படுகின்றது. மேலும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து திரைப்படம் உருவாகின்றது. இதனையில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றது.

Categories

Tech |