இது போல ஏற்கனவே புறக்கணித திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஷாருக்கான் திரைப்படத்திற்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.
நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் நிறமும் பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள பேஷ்ரம் ரங் என்ற வார்த்தையும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் திரைப்படத்தை புறக்கணிக்கும் வகையில் ஹாஷ்டேக்குகளை ட்ரெண்டாகி வருகின்றது. இதனால் ரசிகர்கள் பாய்காட் பதான், பான் பதான் உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை ட்ரெண்டாகி வருகின்றார்கள்.