Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்று திரும்பிய போது… ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பெண்கள்.. 4 பேர் பலி..!!!!

ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பாக்கம் அருகே ஆணிக்கல் பகுதியில் மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த நிலையில் சென்ற 12-ம் தேதி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் தரைப்பாலம் வழியாக கோவிலுக்கு சென்றார்கள். அப்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்று கொண்டிருந்தது.

திடீரென மாலையில் கன மழை பெய்ததால் பாலத்தின் வழியாக பக்தர்கள் மறுக்கரைக்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலத்தை கடக்க முயன்ற சரோஜா, வாசுகி, விமலா, சுசிலா உள்ளிட்ட நான்கு பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்கள். இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். அப்போது மூன்று கிலோ மீட்டர் தொலைவில் புதரில் சிக்கியிருந்த சரோஜா, வாசுகி, விமலா உள்ளிட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டது.

ஆனால் சுசிலாவின் நிலைமை என்ன என தெரியவில்லை. நேற்று முன்தினம் மூன்றாவது நாளாக மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். இதன்பின் மதியம் 2 மணியளவில் சுசிலாவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. இதன்பின் பிரேத பரிசோதனைக்காக அவரின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |