ஆன்லைனில் இரண்டு பேரிடம் மூன்று லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்த சிவம் என்பவரின் வாட்ஸ் அப்பிற்கு சென்ற அக்டோபர் மாதம் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக பதிவு ஒன்று வந்தது. மேலும் அதில் முதலீடு செய்து பொருள் வாங்கி மற்றவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம் கமிஷனாக அதிக அளவு பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர் ஆன்லைனில் குறிப்பிட்ட வங்கி கணக்கில் 1,70,000 செலுத்தி இருக்கின்றார்.
இது போலவே பூனம் என்பவரும் 1,44,000 செலுத்தியிருக்கின்றார். இருவரின் கணக்கிலும் அதிக அளவு பணம் இருப்பது போல சில நாட்களுக்கு முன்பாக காண்பித்துள்ளது. இதை எடுத்து அவர்கள் பணம் எடுக்க முயன்ற போது வரவில்லை. இதனால் அவர்கள் குறிப்பிட்ட ஆன்லைன் முகவரியை தொடர்பு கொண்ட போது எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அப்போதுதான் அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசிடம் புகார் கொடுத்தார்கள். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.