Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தேசிய கராத்தே போட்டி… தூத்துக்குடியைச் சேர்ந்த 27 பேர் வெற்றி… போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு..!!!

தேசிய கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற 27 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.

கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள திருத்துவபுரத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றார்கள்.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள். இவர்களில் 27 பேர் வெற்றி பெற்று பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகளை பெற்று இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார்கள். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். இவர்களை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Categories

Tech |