ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் சென்னை ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பாக 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மருத்துவமனை இயக்குனர், நேர்முக உதவியாளர், மதுரம் பிரைட்டன் தலைமை தாங்க தாசில்தார்கண்ணன், டாக்டர் தினேஷ், பஞ்சாயத்து தலைவர் பிரதீபா, மதிவாணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்த விழாவில் ஸ்ரீ வைகுண்டம் யூனியன் கவுன்சிலர், ராமலட்சுமி, பஞ்சாயத்து உறுப்பினர் பிச்சையா, விவசாய சங்க தலைவர் மதிவாணன், மருத்துவர் ரவீந்திரன், கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார், பொதுமக்கள், மருத்துவ பணியாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.