ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கை வசதி இல்லாமல் மக்கள் தரையில் அமர்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர ஆதார் சேவை மையம் இருக்கின்றது. இங்கே நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் இங்கு வரும் பொது மக்கள் உட்கார இருக்கை வசதி இல்லாமல் தரையில் அமர்ந்து கொள்கின்றனர்.
மேலும் முதியவர்களும் புதிதாக ஆதாரத்தை விண்ணப்பிக்க கைக்குழந்தைகளுடன் பெண்களும் வருகின்றார்கள். இங்கு இருக்கை வசதி இல்லாததால் தரையில் அமர முடியாமல் முதியவர்கள் தவிக்கின்றார்கள். இதுபோலவே பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கை வசதிகள் இல்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.