அவிநாசியில் கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் இருக்கும் ராஜநகரில் வாரம்தோறும் புதன்கிழமை சந்தை கூடுகின்றது. இந்த பகுதியில் ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், ஜவுளி, மளிகை பொருட்கள், சிறுதானியங்கள், உணவு பொருட்கள் என ஏராளமானவற்றை விற்பனை செய்கின்றார்கள்.
இந்த நிலையில் சென்ற புதன்கிழமை சந்தையில் ஒரு பெண் வியாபாரம் செய்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார். பின் வியாபார பணத்தை அவர் எண்ணிப் பார்த்தபோது அதில் ஒரு 200 ரூபாய் நோட்டும் இரண்டு 100 ரூபாய் நோட்டும் கள்ள நோட்டாக இருந்திருக்கின்றது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபோல அவிநாசியில் பல பகுதிகளில் கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டு இருக்கின்றது.