விவசாய நிலத்தில் இருந்து திடீரென நீர்க்குமிழிகள் ஏற்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் காலையில் வயலில் திடீரென நீர்க்குமிழிகள் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் விவசாயிகள் சேற்றைக் கொண்டு நீர்குமிழியை அடைத்தார்கள். இதை தொடர்ந்தும் நீர்க்குமிழி வந்ததால் தங்கள் பகுதியில் பதிக்கப்பட்டிருக்கும் எரிவாயு குழாயில் கசிவை ஏற்பட்டிருக்கின்றதா என அச்சமடைந்து வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் எந்தவித எரிவாயு கசிவும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தியதோடு விவசாயிகள் அச்சம் அடைய தேவையில்லை என கூறினார். இது பற்றி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, நீர்க்குமிழிகள் போல கொப்பளிப்பதால் பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. அறுவடை செய்தவுடன் அப்பகுதியில் மண் பரிசோதனை செய்யப்படும். இதனால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவித்தார்கள். இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.