கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையொட்டி விற்பனை கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் மகளிர் சுய உதவி குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு மாநில அரசு மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களை ஒன்றிணைத்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக விற்பனை வாய்ப்புகளை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் சுய உதவி குழு உறுப்பினர்கள் இந்த சங்கத்தில் பதிவு மேற்கொண்டு அரசு துறைகள் மூலமாக நடைபெறும் விற்பனை கண்காட்சி மற்றும் தமிழ்நாடு மகளிர் மின்மாற்று நிறுவனமும் சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற இருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு தொடர்புடைய கண்காட்சிகளிலும் பங்கேற்குமாறு தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மாதிரி, குழுவின் தீர்மான புத்தகம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.