மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
சென்ற சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது காவேரி நீர் பிடிப்பு தகவல்களை நின்று விட்டது இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு சென்ற சில நாட்களாக நீர்வரத்து குறைந்து கொண்டே வருகின்றது.
சென்ற 14ஆம் தேதி அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரத்து 500 கன அடி வீதம் நீர்வரத்து இருந்த நிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 14,600 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் நேற்று 9 ஆயிரத்து 600 கன அடி நீர் வருகின்றது. அணை நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தானது தற்போது வெளியேற்றப்பட்டு வருகின்றது.