Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினை நம்பும் பிரபல இயக்குனர்… செம்பி படத்தின் 2-வது ட்ரைலர் ரிலீஸ்..!!!

அஸ்வின் நடிக்கும் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.

மைனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான பிரபு சாலமன் தற்போது செம்பி என்ற திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் சேர்ந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்படத்தின் 2-ம் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் அஸ்வின் குமார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவர் பேசியது பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அவரின் மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. இருப்பினும் கதைக்குப் பொருத்தமானவர்களை மதிக்க நடிக்க வைப்பத்தில் கைதேர்ந்தவரான இயக்குனர் பிரபு சாலமன் தற்போது அஸ்வின் குமாரை செம்பி திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இரண்டாவது ட்ரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

Categories

Tech |