Categories
சினிமா தமிழ் சினிமா

பாருடா…! சூப்பர் ஸ்டார் ஃபேமிலியும் இசை புயல் ஃபேமிலியும் எடுத்த செல்பி போட்டோ … சோசியல் மீடியாவில் வைரல்..!!!

ரஜினியும் மகளும், ஏ.ஆர்.ரகுமானும் மகனும் எடுத்த செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஐஸ்வர்யா தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். இந்த நிலையில் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் அமைக்கும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே ரஜினிகாந்த்தும் ஐஸ்வர்யாவும் நேற்று முன்தினம் திருமலையில் சாமி தரிசனம் செய்தார்கள். இதன் பின்னர் விமானம் மூலமாக கடப்பா சென்றார்கள். இவர்களை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானும் கடப்பாவிற்கு சென்றார். இந்த நிலையில் ரஜினி காந்த், ஐஸ்வர்யா, ஏ.ஆர்.ரகுமான் அவரின் மகன் ஏ.ஆர்.அமீர் உள்ளிட்ட நான்கு பேரும் ஒன்றாக செல்பி எடுத்துக் கொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |