Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்ல இருக்கும் “தீம் மியூசிக்”… ஜெயிலர் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் நியூஸ்..!!!!

ஜெயிலர் திரைப்படத்தின் தீம் மியூசிக் குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரஜினியின் முத்துவேல் பாண்டியன் தீம் மியூசிக் சிறப்பு வீடியோ அண்மையில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த தீம் மியூசிக் தற்போது அனைத்து ஆடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்பார்மில் வெளியாகி உள்ளது. இதனை படக்குழு ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்து இருக்கின்றது.

Categories

Tech |