ரஞ்சிதமே பாடலுக்கு எடிட்டிங் செய்யப்பட்ட ரஜினியின் வீடியோ வைரலாகி வருகின்றது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் ரஞ்சிதமே பாடலை தலைவர் ரஜினியின் ராக்கம்மா கையத்தட்டு பாடலுடன் இணைத்து இணையதள வாசிகள் எடிட்டிங் செய்து வெளியிட்டு இருக்கின்றார்கள். இந்த சூப்பரான வீடியோவை நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றது.
Adappaavingalaaa Aniyaya sync pandringale 😍😍😍 pic.twitter.com/15GP6uVTnZ
— Sathish (@actorsathish) December 16, 2022