தில் ராஜுவின் கருத்திற்கு திருப்பூர் சுப்ரமணியம் பதிலடி தந்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் துணிவு திரைப்படம் விஜயின் வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதனால் திரையுலக வட்டாரத்தினர் மத்தியில் பரபரப்புஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் என பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திருப்பூர் சுப்பிரமணியன் பதிலடி தந்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜு விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ. இதனால் வாரிசு திரைப்படத்திற்கு அதிக தியேட்டர் கொடுக்க வேண்டும். இது பற்றி உதயநிதியை சந்தித்து நேரில் பேச போகின்றேன் என தெரிவித்தார். இதற்கு சோசியல் மீடியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியுள்ளதாவது, சினிமாவில் நம்பர் ஒன் ஸ்டார் கதை தான்.
படம் நன்றாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக விஜய், அஜித், கமல்ஹாசன் படங்கள் வந்தது. இவற்றுடன் ஒப்பிடும் போது பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலை குவித்தது. அப்போ மிக முக்கியமானது கதை தானே. கமல் நடிப்பில் நான்கு வருடங்களுக்குப் பிறகு விக்ரம் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட். அப்ப விஜய்யை விட கமல் தான் நம்பர் ஒன் நடிகர் எனக் கூற முடியுமா? சினிமாவில் எந்த படம் நன்றாக இருக்கின்றதோ, அதுதான் சூப்பர் ஹீரோ.
படம் நன்றாக இல்லை என்றால் மக்கள் தியேட்டருக்கு செல்வது கிடையாது. படம் நல்லா இருந்தால் தான் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கின்றார்கள். அப்படி பார்த்தால் பீஸ்ட் திரைப்படம் தோல்விதான். தில் ராஜு ஆந்திராவில் உட்கார்ந்து கொண்டு எனக்குத்தான் அதிக தியேட்டர் கொடுக்கணும். விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என்கின்றார். யார் பெரிய ஸ்டார் என்பது எங்களுக்கு தெரியாதா? எந்த கதை நல்லா இருக்குதோ அது தான் பெரிய ஸ்டார் என பதிலடி தந்துள்ளார்.