சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உழுமலையை அடைத்திருக்கும் கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது இந்த ஆடைகளும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சென்ற மூன்று மாதங்கள் காண சம்பளம் வழங்காமல் நிலுவையில் இருக்கின்றது.
மேலும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் பிஎஃப் தொகையை காலை நிர்வாகம் சென்ற 25 மாதங்களாக பிஎப் அலுவலகத்தில் செலுத்தவில்லை இதன் காரணமாக ஓய்வு பெற்ற 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பென்ஷன் கிடைக்காமல் இருக்கின்றது இதனால் தொழிலாளர்கள் சம்பளத்தை வழங்க கோரியும் பிஎப் தொகையை செலுத்துமாறு சென்ற 12ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
நேற்று முன்தினம் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் துறை தொழிலாளர் உதவியாளர் செந்தில்குமார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றதில் சர்க்கரை ஆலை அதிகாரிகள், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
இந்தக் கூட்டத்தில் நிலுவை தொகையை பிஎஃப் அலுவலகத்தில் வருகின்ற 26ம் தேதிக்குள் கட்டுவது, இரண்டு மாதங்களுக்கான சம்பள நிலுவைத் தொகையை 30ஆம் தேதிக்குள் வழங்குவது உள்ளிட்ட உறுதி மொழியை ஆலை நிர்வாகம் அளித்தது. இதனால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று வேலைக்கு சென்றனர்.