தகராறை தட்டி கேட்ட இளைஞர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள என்.கே.சி செட்டி தெருவை சேர்ந்த திமுக பிரமுகரான குகன் என்பவரின் மனைவி காயத்ரி. இவர் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு இளைஞர்கள் கூச்சலிட்டபடியே காயத்ரியை ஆபாசமாக பேசி இருக்கின்றார்கள். இதனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தட்டி கேட்டபோது மோட்டார் சைக்கிள் வந்த ஒருவர் கையில் இருந்த இரும்பு தடியால் சரத்குமார் என்பவரின் தலைமீது தாக்கி இருக்கின்றார்.
இதில் அவர் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உள்ளார். இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பைக்கில் வந்த நான்கு இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து விட்டனர். இது குறித்து காயத்ரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் வீட்டு வாசலில் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.