Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முண்டியம்பாக்கத்துக்கு வந்தடைந்த 4,000 டன் யூரியா…. பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புதல்..!!!

நான்காயிரம் டன் யூரியா முண்டியம்பாக்கத்துக்கு வந்தடைந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி சம்பா சாகுபடிக்கு உரம் கிடைப்பதற்கு ஏற்ப சென்னை மதராஸ் உர நிறுவனம் கொரமண்டல் உர நிறுவனத்தில் இருந்து சரக்கு ரயில் மூலமாக சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு 4056 டன் யூரியா முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

இதை தொடர்ந்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரிய சாமி மேற்பார்வையிட உதவிய இயக்குனர் விஜய் சந்தர் தலைமையில் ரயில்வே தொழிலாளர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு 2306 டன், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தலா 200 டன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 400, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 600 டன், வேலூர் மாவட்டத்திற்கு 350 டன் என யூரியா பிரித்து லாரிகளில் ஏற்றி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனையாளர்களுக்கு அனுப்பட்டது..

Categories

Tech |